தடுப்பில் உள்ள போராளிகளை விடுவிப்பதாக கூறியும், மிரட்டியும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை இலங்கை அரசு தயாரித்து வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் கொழும்பு வரவுள்ள நிலையில் அவருக்கு விடுதலைப்புலிகளின் போர்க்குற்ற அறிக்கை ஒன்றினை புதிதாக வழங்கவும், பொது நலவாய தலைவர்களின் மா நாட்டில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுமே இந்த வாக்கு மூல அறிக்கை தயாராகி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகவே தற்போது ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பிரதேசத்தில் இயங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா என்று அழைக்கப்படும் இரு சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரி உட்பட 80 பேரை தமிழீழ விடுதலைப் புலிகளே கொலை செய்து எரித்தனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Post a Comment