Latest News

August 05, 2013

வெலிவேரிய எதிரொலி : கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்
by admin - 0

'உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கு அரசாங்கம் துப்பாக்கிச் சூடு" அந்த அடக்கு முறைக்கு எதிராக போராடுவோம் என சூளுரைத்து இன்று மாலை ஜனநாயக மக்கள் இயக்கம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், தொழிற்சங்கவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 'பொய்யான கதைகள் வேண்டாம்" , 'மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று" , ' குடிநீர் கேட்ட மக்களுக்கு துப்பாக்கிச் சூடு" , 'உரிமைக்காக ஒன்றிணைவோம்" , ' மக்களின் பிரச்சினைகளுக்கு அரசிடம் தீர்வு இல்லை" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

« PREV
NEXT »

No comments