குறித்து லண்டன் மெட்ரோ பொலிட்டன்
பொலிஸாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளதாகவும்
அத்தகவல் குறித்து அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம்
திகதி அதிகாலை பாரிஸ் நகரிலுள்ள சுரங்கப் பாதையொன்றில் இளவரசி டயானா, அவரின் காதலரான
டோடி அல் பயாட், ஆகியோர் பயணம் செய்த கார் தூண்
ஒன்றுடன் மோதியது. இதனால் இளவரசி டயானா, டோடி அல்பயாட் மற்றும்
சாரதி ஆகியோர் உயிரிழந்தனர். டயானாவின் மெய்ப்பாதுகாலவர் மாத்திரம் உயிர்தப்பினார். இம்மரணத்தில் சதிகள் இடம்பெற்றிருக்கலாம் என குற்றம்
சுமத்தப்பட்டது. எனினும் கவனயீனமான முறையில், வேகமாக காரை செலுத்தியமை, அக்காரை பாப்பராசிகள்
எனும் புகைப்படவியலாளர்கள்
துரத்திச்சென்றமை ஆகியனவே இச்சம்பவத்துக்கு காரணம்
என 2008 ஆம் ஆண்டு பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதிய தகவல் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அத்தகவல் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment