Latest News

August 17, 2013

நவநீதம்பிள்ளைக்கு 47 NGO க்கள் அவசர மகஜர்
by admin - 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை செல்லும் முன்னர், 47 அரசசார்பற்ற நிறுவனங்கள், அவருக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளதுடன் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று விசாரணை நடத்துமாறும், வடக்கில் உள்ள மக்களை தனிப்பட்ட ரீதியாக சந்தித்து தகவல்களை கேட்டறியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனை மேலும் சில விடயங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் இந்த அமைப்புகள் மனித உரிமை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நீதிமன்ற ஆவணங்கள், காவற்துறை அறிக்கைகள், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இந்த அமைப்புகள் கோரியுள்ளன.
இதனை தவிர நவநீதம்பிள்ளை வடக்கு பகுதிக்கு விஜயம் செய்யும் போது, இராணுவம் அல்லது காவற்துறை பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இந்த அமைப்புகள் கோரியுள்ளன. அதேவேளை பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட 800 பேர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து செயற்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றே நவநீதம்பிள்ளைக்கு மேற்படி மகஜரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்கா இலங்கை தொடர்பாக விசாரணை நடத்தவே ஐக்கிய நாடுகள் ஆணையாளரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments