Latest News

August 17, 2013

ஈழ இனப்படுகொலைக்கு சிங்கள அரசை விட இந்திய அரசு தான் காரணம்! - தமிழருவிமணியன்
by admin - 0

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் கூறினார். ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் திறந்துவைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:தமிழக அரசியலில் நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில் காந்திய மக்கள் இயக்கம் தனது பணியை வேகமாக செயல்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்கள், மாணவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு இணையக்கூடிய ஒரே இயக்கமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள பகைமை சார்ந்த அரசியல் ஒழிக்க வேண்டும். தமிழ் இனம், மொழி, மாநிலத்தின் உரிமை என்று வரும்போது கட்சி அரசியலை கடந்து அனைத்து தலைவர்களும் ஓரே குரல் கொடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்ட விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் ஒரே நோக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை போர் தொடுப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை யார் அனுமதியும் இல்லாமல், பாராளுமன்றம் அங்கீகாரம் இல்லாமல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு சீதனமாக கொடுத்துவிட்டார்.
வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்காக காந்திய மக்கள் இயக்கம் தொடர்ந்து பாடுபடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழ் இனம் ஈழத்தில் ரத்தம் சிந்துவதற்கு ராஜபக்சவை விட இந்திய அரசு தான் முக்கிய காரணம். பாஜகவில் சுப்பிரமணியசுவாமி இணைந்திருப்பது என்பது கட்சிக்கு மிக்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சுப்பிரமணியசுவாமி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டால் பாஜகவை தோற்கடிக்க காந்திய மக்கள் இயக்கம் பாடுபடும். ஏனெனில் சுப்பிரமணிய சுவாமி ராஜபட்சவோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 2016ல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். இதற்கான பணிகளை காந்திய மக்கள் இயக்கம் முன்னெடுத்து செல்கிறது என்றார்.
« PREV
NEXT »

No comments