இரவு டெஸ்ட் கிரிக்கெட்
போட்டியொன்றை நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்த
யோசனையை ஸ்ரீலங்கா கிரிக்கெட்
(இலங்கை கிரிக்கெட் சபை) நிராகரித்துள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் ஐக்கிய
அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டிகளில்
பகல் இரவு போட்டியொன்றையும் நடத்த
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரும்பியிருந்தது. ஆனால், பகல் இரவு டெஸ்ட போட்டிக்கு பயன்படுத்தப்படக்கூடிய இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடிய
அனுபவம் இலங்கை வீரர்களுக்கு இல்லை என்பதை காரணம் காட்டி ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. "தேசிய அணி வீரர்கள் புதிய இளஞ்சிவப்பு பந்துகளுடன் மின்னொளியில்
விளையாடி பயிற்சி பெற்றதில்லை என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிய பகல் இரவு -டெஸ்ட்
போட்டியில் விளையாட விரும்பவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அறிவிப்பது என்ற அணி நிர்வாகத்தின் தீர்மானத்தை ஆதரிப்பதற்கு நிறைவேற்றுக்குழு தீர்மானித்தது" என ஸ்ரீலங்கா கிரிக்கெட்
விடுத்தஅறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment