துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விமானப் படையில் பணி புரியும் பெண் ஒருவரும் விமானப்படை வீரர்
ஒருவருமே விமானப்படை கோப்ரல் ஒருவரின்
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். விமானப்படை கோப்ரல் குறித்த இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதன் பின்னர்
தன்னைத் தானும் சுட்டுள்ளார். இதன்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த நபர்கள்
திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த கோப்ரல் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். காதல் விவகாரமே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை படையினர் இடையே உள் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment