இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பது தொடர்பாக தமிழக கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் கனிவுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுப்பார் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதே கருத்தை திமுக தலைவர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தமிழக தலைவர் ஞானதேசிகனும் பிரதமரை நேரில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார்.
இது வெளியுறவுத்துறை முடிவெடுக்க வேண்டிய ஒன்று. இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறது.
அவர்கள் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டுவதையும் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஆகவே, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழக கட்சிகளின் கோரிக்கையை பிரதமர் கனிவுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன் என்றார்
No comments
Post a Comment