Latest News

August 18, 2013

லண்டன் உலக தமிழியல் ஆய்வு மாநாடு அரசியல் சார்ந்ததல்ல - பேராசிரியர் ஏ. சண்முகதாஸ்
by admin - 0

லண்டனில் தற்போது நடைபெற்று வரும் உலக தமிழியல் ஆய்வு மாநாடு, அரசியல் சார்ந்ததல்ல என தமிழ் மொழி மற்றும் மொழியியல் துறை பேராசிரியர் ஏ. சண்முகதாஸ் தெரிவித்தார்.
மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட 124 ஆய்வு கட்டுரைகளில் எந்த கட்டுரையும் அரசியல் சார்ந்த கட்டுரை அல்ல என அவர் குறிப்பிட்டார்.
லண்டன் தமிழியல் மாநாடு அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளை ஊக்குவிக்கும் மாநாடு என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பேராசியர் சண்முகதாஸ், மாநாடு தமிழ் மொழி சார்ந்ததேயன்றி அரசியலுடன் தொடர்புடைய மாநாடு அல்ல என்றார்.
மாநாட்டின் நோக்கங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
சென்னையில் உள்ள தமிழ் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் சண்முதாஸ், லண்டன் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு கண்டி பேராதனை பல்லைக்கழகத்தில் ஆரம்பித்து, யாழ் பல்கலைக்கழகம் வரையான தனது கல்விசார் வாழ்க்கை குறித்து சுருக்கமான விளக்கினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல், அரசியல் தொடர்புகள் மற்றும் அரசியல்வாதிகளின் பங்கேற்பு இல்லை என்று சரிபார்த்து ஆராய்ந்த பின்னரே மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழியல் தொடர்பான ஆய்வு கட்டுரைகளை இந்த மாநாட்டில் சமர்ப்பிக்குமாறு இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், இலங்கை, மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழங்களுக்கு அழைப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதேபோன்ற எட்டு சர்வதேச மாநாடுகள் கடந்த வருடங்களில் நடத்தப்பட்டதுடன் இறுதியாக 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.
சிறந்த தமிழ் அறிஞரான தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா இந்த வருடம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் சமர்ப்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட 124 ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படுவதற்காக சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் கற்கைகளுக்கான நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு கட்டுரைகளில் அரசியல் அல்லாத விடயங்களே அடங்கியிருக்கின்றன என்பதை உறுதியாக கூறுகிறோம். அரசியல் சார்ந்த கட்டுரைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மாநாட்டில் 45 முதல் 50 பிரதிநிதிகள் வரை கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் பெருபாலானவர்கள் இந்தியா, இலங்கை இருந்து வருகை தந்துள்ளனர்.
நான் இலங்கையில் இருந்து வருகை தந்துள்ளேன். அத்துடன் பேராதனை, யாழ்ப்பாணம், சபரகமுவ, ஊவா- வெல்லஸ்ஸ போன்ற பல்கலைக்கழங்களில் இருந்து இந்த பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர். பலருக்கு விசா கிடைக்காததால் அவர்களால் வர முடியவில்லை.
தமிழ் இலக்கியம், மொழியியல், கலாசாரம் உள்ளிட்ட விடயங்கள் மட்டுமே தமிழியல் மாநாட்டில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விவாதிக்கப்படும் எனவும் பேராசிரியர் சண்முதாஸ் கூறினார்.
« PREV
NEXT »

No comments