இலங்கை அரசை கொமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கிட இந்தியா உறுப்பு நாடு என்ற முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும், கொமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டுமென்றும் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்க இந்தியப் பூரான்கள் இயக்கம் சார்பில் இரத்தக் கையெழுத்து இயக்கம் இன்று காலை புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு இயக்கத்தின் தலைவர் பூரான். வீ. போன்ஸ் ரமேஷ் தலைமைத் தாங்கினார். செந்தமிழர் இயக்கத்தின் தலைவர் நா.மு.தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி அமைப்பாளர் சிறிதர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
நாளை இந்த இரத்த கையெழுத்துக்கள் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments
Post a Comment