Latest News

August 05, 2013

வடக்கில் சித்த ஆயுர்­வேதத் துறையை கண்­கா­ணிக்க விசேட நட­வ­டிக்­கைகள்
by admin - 0

வட­ப­கு­தியில் உள்ள ஆயுர்­வேத சுதேச மருந்து விற்­பனை நிலை­யங்கள் மற்றும் மருந்து தயா­ரிப்போர் மீது விசேட கண்­கா­ணிப்புப் பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஏற்­பா­டு­களை வடக்கு மாகாண சுதேச வைத்­திய திணைக்­களம் செய்­துள்­ளது. ஒழுங்கு விதி­களை மீறு­கின்ற நிறு­வ­னங்கள் மீது சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
ஆயுள்­வேத மற்றும் சுதேச வைத்­தி­யத்­து­றையின் தனித்­து­வத்­தையும் தரத்­தையும் மேம்­ப­டுத்­து­வ­தோடு பக்­க­வி­ளை­வுகள் அற்ற தூய­ம­ருந்துப் பாவ­னையை பொது­மக்கள் மத்­தியில் மேல் நிலைப்­ப­டுத்­து­வற்கு ஏது­வாக வடக்கு மாகாண சுதேச வைத்­திய திணைக்­க­ளமும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சும் இணைந்த நிலையில் அதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளன.
விற்­பனை செய்­யப்­படும் மருந்துப் பொருட்­களும் மூலப்­பொ­ருட்­களும் சுத்­த­மா­கவும் சுகா­தார முறை­யிலும் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். மருந்­துகள், மூலப்­பொ­ருட்கள் அனைத்தும் அடை­யா­ளப்­ப­டுத்தும் சுட்­டிகள் கொண்­டி­ருப்­பதை உறுதி செய்­தல்­வேண்டும். மருந்து விற்­பனை நிலையம் உரிய முறையில் பதி­வு­செய்­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­தலும் பதிவுச் சான்­றி­தழை பார்­வையில் படும்­படி காட்­சிப்­ப­டுத்தல், மருந்து உற்­பத்­திகள் நடை­பெ­று­மாயின் அதற்­கான அனு­ம­தியை ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பெற்­றி­ருத்தல், அதனை பார்­வை­யில்­படும் படி வைத்தல் என்­பன உரி­ய­மு­றையில் அனு­ச­ரிக்க வேண்டும். இவை­களை வலி­யு­றுத்தி வட­மா­காண சுதேச வைத்­தியத் திணைக்­கள ஆணை­யாளர் டாக்டர் திரு­மதி சியா­மளா துரை­சிங்கம் விரி­வான சுற்­ற­றிக்கை ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.
« PREV
NEXT »

No comments