Latest News

August 05, 2013

கைகொடுப்பாரா நவநீதம்பிள்ளை?
by admin - 0

ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை அடுத்த மூன்று வாரங்­களில் இலங்­கைக்கு பயணம் மேற்­கொள்­ள­வுள்ள நிலையில், அர­சாங்­கமும் தற்­காப்பு நட­வ­டிக்­கைகள் சில­வற்றில் இறங்­கி­யுள்­ ளது.
வரும் 25ஆம் திகதி தொடக்கம், 31 ஆம் திகதி வரை நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கையில் பய­ணத்தை மேற்­கொள்­கிறார்.
அவ­ரது ஒரு­வார கால உண்மை கண்­ட­றியும் பயணம், 31 ஆம் திகதி கொழும்பில் நடத்­த­வுள்ள செய்­தி­யாளர் சந்­திப்­புடன் நிறை­வ­டையும்.
இலங்கை அர­சாங்கம் தொடர்­பான கடு­ மை­யான விமர்­ச­னங்­களை சர்­வ­தேச அரங் கில் முன்­வைத்து வரு­ப­வர்­களில் நவ­நீ­தம்­பிள்­ளையும் ஒருவர்.
அவர் ஒரு தமிழர் என்­பதால், இலங்கை அர­சுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வ­தாக கூட அர­சாங்கம் அவரை விமர்­சித்­தது.
எப்­போ­தெல்லாம், ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்கை விவ­காரம் குறித்து விவாதம் எழு­கி­றதோ, அப்­போ­தெல்லாம், நவ­நீ­தம்­பிள்­ளையும் அவ­ரது பணி­ய­கமும், நடு­நி­லை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்றும், பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­வ­தா­கவும் குற்­றஞ்­சாட்­டு­வது இலங்­கையின் வழக்கம்.
இலங்கை அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன் வைப்­ப­வ­ராக நவ­நீ­தம்­பிள்­ளையும், அவரை கடு­மை­யாக விமர்­சிக்கும் நிலையில் இலங்கை அர­சாங்­கமும் இருக்கும் நிலையில், இந்தப் பயணம் உல­க­ளவில் முக்­கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­துக்­க­மை­யவே இலங்கை வரும் நவ­நீ­தம்­பிள்ளை, இங்­குள்ள நிலை­மை­களைப் பார்­வை­யிட்டு, முன்­னேற்­றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்­பிக்­கும்­ப­டியும் பணிக்­கப்­பட்­டுள்ளார். நவ­நீ­தம்­பிள்­ளையின் இலங்கைப் பயணம் முடிந்த அடுத்­த­வா­ரமே, ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையின் 24ஆவது அமர்வு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
அந்த அமர்வில் தனது இலங்கைப் பய ணம் குறித்த அறிக்­கையை நவ­நீ­தம்­பிள்ளை சமர்ப்­பிக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும், இலங்கை குறித்த ஒரு மேலோட்­ட­மான- இடைக்­கால அறிக்­கை­யை­யா­வது அவர் ஜெனீ­வாவில் அடுத்த மாதம் முன்­வைப்­ப­தற்கு சாத்­தி­ய­முள்­ளதால், அர­சாங்கம் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.
உண்­மையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்­க­வுள்ள 25ஆவது அமர்வில் தான், இலங்கை நிலை­மை­களின் முன்­னேற் றம் குறித்த முழு­மை­யான அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும் என்று ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அதன்­படி, 25ஆவது அமர்வில் எத்­த­கைய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வது என்­பது குறித்து அர­சாங்கம் இப்­போது கவ­லைப்­ப­ட­வில்லை.
24ஆவது அமர்வில் நவ­நீ­தம்­பிள்ளை இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தா­னாலும், அதில் குற்றம் காணப்­படக் கூடாது என்­பதில் உறு­தி­யாக உள்­ளது.
ஏனென்றால், நவ­நீ­தம்­பிள்ளை அளிக்கும் அறிக்கை இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பாத­க­மாக அமைந்து விட்டால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடக்­க­வுள்ள கொமன்வெல்த் மாநாட்டை அது பாதிக் கும்.
ஏற்­க­னவே, கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் கொமன்வெல்த் மாநாட்­டையும் மனி­த­ உ­ரிமை விவ­கா­ரங்­க­ளையும் இணைத்து வைத்து தலை­யிடி கொடுத்து வரு­கின்­றன.
இந்­த ­நி­லையில், நவ­நீ­தம்­பிள்ளை அடுத்த மாதம் கொடுக்கும் அறிக்கை பாத­க­மாக அமைந்து விடக் கூடாது என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ள­தாகத் தெரி­கி­றது.
இதற்­காக அர­சாங்கம் நீண்­ட­கா­ல­மாக நிறை­வேற்­றாமல் இழுத்­த­டித்து வந்த சர்­வ­தேச சமூ­கத்தின் கோரிக்­கைகள் சில­வற்றை நிறை­வேற்றும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் மேலும் சில­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த இணங்­கி­யுள்ள அர­சாங்கம் அதன் செயல்­முறை குறித்து விப­ரிக்கும் இணை­யத்­த­ளத்­தையும் ஆரம்­பித்­துள்­ளது.
திரு­கோ­ண­ம­லையில், ஐந்து மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக, 11 விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன ரைக் கைது செய்­துள்­ளது.
காணா­மற்­போனோர் தொடர்­பாக ஆரா யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்றை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.
தங்­கா­லையில், பிரித்­தா­னிய சுற்­றுலாப் பய­ணியின் கொலை தொடர்­பாக ஆளும்­கட்­சியின் செல்­வாக்­கு­மிக்க உள்ளூர் தலைவர் உள்­ளிட்­ட­வர்கள் மீது குற்­றச்­சாட்­டு­களை சுமத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
யாழ்.மாவட்­டத்தில் வலி­காமம் பகு­தியில் பொது­மக்­களின் காணி­களில் அமைந்­தி­ருந்த
13 முகாம்­களை மூடு­வ­தற்கு எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை.
இவை­யெல்லாம், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யையும், சர்­வ­தேச சமூ­கத்­தையும் திருப்­திப்­ப­டுத்த அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள்.
ஆனால், சர்­வ­தேச அழுத்­தங்­களின் பேரில் காணா­மற்­போனோர் தொடர்­பான ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று ஜனா­தி­பதி நிரா­க­ரித்­துள்ளார்.
ஆனால், உண்மை சர்­வ­தேச அழுத்­தங்கள் தான் என்­பதில் சந்­தே­க­மில்லை.
இவற்­றை­யெல்லாம் அர­சாங்கம் தானா­கவே முன்­வந்து செய்­தது என்­பதை நம்­பு­வ­தானால், எதற்­காக இதனைச் செய்­வ­தற்கு இவ்­வ­ளவு காலமும் தேவைப்­பட்­டது என்ற கேள்­வியை எழுப்ப வேண்­டி­யி­ருக்கும்.
காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பான ஆணைக்­குழு விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்­டா­ம­லேயே இருந்து வந்­தது.
ஏனென்றால் அது, போரின் இறு­திக்­கட்­டத்தில், சர­ண­டைந்து காணா­மற்­போன புலி­களின் முக்­கிய தள­ப­திகள், பிர­மு­கர்கள் பற்­றிய விவ­கா­ரத்­தையும் கிள­றி­விடும் என்­பது அர­சாங்­கத்­துக்குத் தெரியும்.
எனவே தான், இந்­த­ளவு காலமும் இந்த விவ­கா­ரத்தை இழுத்­த­டித்து வந்­தது.
தனக்கு அல்­லது படை­யி­ன­ருக்குப் பாதி ப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதால் தான், இது­போன்று நட­வ­டிக்­கை­களை எடுக்­காமல் அர­சாங்கம் தவிர்த்து வந்­தது.
ஆனால், இப்­போது நவ­நீ­தம்­பிள்­ளையின் வருகை, கொமன்வெல்த் மாநாட்டை குறை­யே­து­மின்றி நடத்த வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்கம் தனது பிடி­வா­தத்தில் சில சம­ர­சங்­களை செய்து கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
கொமன்வெல்த் மாநாடு விவ­காரம் ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு என்­பதை விட, அந்தக் குடும்­பத்தின் கௌரவப் பிரச்­சி­னை­யா­கவே உள்­ளது.
இலங்­கையில் இதற்கு முன்னர் நடந்த மிகப்­பெ­ரிய சர்­வ­தேச மாநாடு என்றால் அது சிறி­மாவோ காலத்தில் நடத்­தப்­பட்ட அணி­சேரா நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாடு தான்.
அதற்குப் பின்னர் சார்க் தலை­வர்­களின் மாநாட்டைத் தவிர வேறேதும் இலங்­கை யில் நடந்­த­தில்லை.
அணி­சேரா மாநாட்டைத் திறம்­பட நடத்தி, புகழ் சேர்த்த சிறி­மாவோ பண்
டா­ர­ நா­யக்­கவைப் போன்று கொமன்வெல்த் மாநாட்­டினால், புகழ்­பெற நினைக்­கிறார் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ.
அந்த திட்டம் நிறை­வே­று­வது நவ­நீ­தம்­பிள்­ளையின் கையிலும் உள்­ளது.
எனவே தான் அவ­ரது வரு­கைக்கு முன்னர் அர­சாங்கம் ஏதோ சில­வற்றைச் செய்து அவரைச் சமா­தா­னப்­ப­டுத்த முனை­கி­றது. ஆனால், அவர் அர­சாங்­கத்தின் தேவை­களை நிறை­வேற்றும் ஒரு­வ­ராக இருப்பார் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.
ஏற்­க­னவே இலங்கை அர­சாங்கம் தொடர்­பாக அவர் கொண்­டி­ருக்கும் கருத் தும், இலங்கைப் பய­ணத்தில் பக்­கச்­சார்பு நிழல் ஏதும் படிந்து விடாமல் தவிர்ப்­பதில் ஐ.நா அதி­கா­ரிகள் காட்டும் அக்­க­றையும் அத்­த­கைய எதிர்­பார்ப்­பு­களை கொள்ள வைக்­க­வில்லை.
நவ­நீ­தம்­பிள்ளை யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலைப்
பகு­தி­க­ளுக்கு பயணம் செய்­வ­தையே முக்­கிய நோக்­க­மாக கொண்­டுள்ளார்.
இந்தப் பகு­தி­க­ளுக்கு தனியார் விமா­னத் தில் அவர் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கே, ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் திட்­ட­மிட்­டுள்­ளது.
ஆனால், போர் முடி­வுக்கு வந்­த­வுடன், ஐ.நா பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்கை விமா­னப்­படை ஹெலியில் பாது­காப்­பாக பய­ணத்தை மேற்­கொண்­டதைச் சுட்­டிக்­காட்டி, நவ­நீ­தம்­பிள்­ளை­யையும், விமா­னப்­ப­டையின் ஹெலி ருவர்ஸ் விமா­னங்­களை பயன்­ப­டுத்­தும்­படி அழுத்தம் கொடுத்­துள்­ளது.
பான் கீ மூன் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த காலத்தில், தனியார் விமா­னங்கள் போர் வல­யத்தில் பயணம் மேற்­கொள்­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­தது.
அதனால், தனியார் விமா­னத்தை பான் கீ மூன் பயன்­ப­டுத்தக் கூடிய நிலை இருக்­க­வில்லை. ஆனால், இப்­போது நிலை அப்­ப­டி­யில்லை.
எந்த விமானமும் எங்கும் பயணம் மேற் கொள்ள அனுமதி உள்ளது.
அரசாங்கம் விமானப்படை விமானத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், தாம் விரும்பியவாறு நவநீதம்பிள் ளையின் பயணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கே என்று கருதப்படுகிறது.
பான் கீ மூன், விமானப்படை விமானங்க ளில் பயணம் செய்ததால், முக்கியமான பல இடங்களை தவறவிட்டிருந்தார்.
அரசாங்கம் எங்கெல்லாம் கொண்டு சென் றதோ அந்த இடங்களைத் தான் அவர் பார் வையிட்டார்.
யாரையெல்லாம் ஒழுங்கு செய்ததோ, அவர்களைத் தான் சந்தித்தார்.
ஆனால், அப்படியொரு தவறைச் செய்ய நவநீதம்பிள்ளை தயாராக இல்லை என்பதையே, விமானப்படை விமானத்தில் பயணத்தை மேற்கொள்ள மறுப்பு வெளி யிட்டதில் இருந்து உணர முடிகிறது.
எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளையின் பய ணத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முனைந்தாலும், அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தே கம் தான்.

ஹரிகரன்

« PREV
NEXT »

No comments