Latest News

August 15, 2013

வடக்குத் தேர்தல் குறித்து பிரிட்டனில் கூட்டங்கள்; சம்பந்தன் கலந்துகொள்கிறார்
by admin - 0

"வடமாகாண சபைத் தேர்தலும் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பும்' என்னும் தொனிப்பொருளில் பிரிட்டனில் கூட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிட்டன்கிளை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.' இந்தக் கூட்டங்கள் இன்று வியாழக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும இரு இடங்களில் நடைபெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார். முதலாவது கூட்டம் இன்று வியாழக்கிழமை லண்டன் நேரப்படி மாலை 6.30 மணிக்கு மிடில் செக்ஸ் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது கூட்டம் நாளை மறுதினம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ஈஸ்ற்தாம் என்ற இடத்தில் நடைபெறும். இந்தக் கூட்டங்களில் பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்வர் என எதிர் பார்க்கப்படுகிறது.
« PREV
NEXT »

No comments