யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் அத்துமீறிக் குடியிருந்த சிங்களக் கிராமத்திலுள்ள புத்த விகாரை மீது இனம் தெரியாதவர்கள் கைக்குண்டு ஒன்றைவீசி வெடிக்க வைத்துள்ளதாக யாழ்.பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர். இன்று இரவு 9.00 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் விகாரை சேதமடைந்துள்ளதாகவும் இப் பகுதியில்
பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப்
பொறுப்பதிகாரி சமன்சிகேரா குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து வீதிரோந்து பணியில்
ஈடுபட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசி வெடிக்க
வைத்துள்ளதாக சிங்கள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment