நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு இராணுவத்தினரை அனுப்பும் வகையில் ஜனாதிபதியின் அதிகார சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு இனி இராணுவத்தினரே அனுப்பி வைக்கப்படுவர்.
இதற்கு தற்போது ஜனாதிபதியிடம் அதிகாரம் இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்
No comments
Post a Comment