சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க பதவியேற்றதை அடுத்து, சிறிலங்கா இராணுவக் கட்டளை அமைப்பில் மாற்றங்களைச் செய்துள்ளார்.
நாளை மறுநாள் – ஓகஸ்ட் 12ம் நாள் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு பாதுகாப்பு கற்கையை முடித்துத் திரும்பும், மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேற்குப் பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறப்புப் படைப்பிரிவின் தளபதியாகவும் மேலதிக பொறுப்பை வகிப்பார்.
கவசப்படைப் பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸும், பெண்கள் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் எல்.பெரேராவும், யாழ்.படைகளின் தளபதியாக உள்ள மேஜர் மகிந்த ஹத்துருசிங்க, மேலதிகமாக இயந்திர காலாற்படைப்பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலகு காலாற்படைப் பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகரவும், கொமாண்டோப் படைப்பிரிவின் தளபதியாகவும், தியத்தலாவ இராணுவப் பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரியாகவும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத் தலைமையக, பொது அதிகாரிகளுக்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகலவும், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் பணியகத்தின், தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்தவும், மத்திய பாதுகாப்புப் படைகள் தலைமையகத்தின் தளபதியாக மேஜர் ஜெனரல் மடவெலவும், பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் கல்லூரி தளபதியாக மேஜர் ஜெனரல் ஜனக வல்கமவும், ஆயுத தளபாடப் பிரிவுக்கான பொறுப்பதிகாரியாக, அமால் கருணாசேகரவும், பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் பணியகத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் பி.ஏ.பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பிரிகேடியர் எடமா, கூட்டுப்படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு பணிப்பாளராகவும், பிரிகேடியர் விக்கிரமசிங்க இராணுவத் தலைமையக விநியோக மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளராகவும், பிரிகேடியர் இரத்தினசிங்கம், சிறிலங்கா இராணுவ சேவைப் படைப்பிரிவின் தளபதியாகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
58வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் சி.குணவர்த்தனவும், 22வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் விக்கிரமரத்னவும், 64வது டிவிசன் தளபதியாக பிரகேடியர் எகலப்பெருமவும், 66வது டிவிசன் தளபதியாக பிரிகேடியர் அருண வன்னியாராச்சியும், பொறியியல் படைப்பிரிவின் தலைமையக பிரதானியாக பிரிகேடியர் திருநாவுக்கரசுவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment