Latest News

August 08, 2013

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திரு சி. வரதராஐன் அவர்கள் வடமாகாண சபைத் தேர்தல்தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு செய்தி
by admin - 0

யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல்
ஆசிரியரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்தவருமான திரு சி. வரதராஐன் அவர்கள்
வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஊடகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு செய்தி

1. தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடமாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நோக்குகின்றது? தமிழ்தேசிய மக்கள்
முன்னணியை பொறுத்தவரையில் ஒற்றையாட்சியின்
கீழான இந்தப் 13வது திருத்தச் சட்டத்தையும் மாகாண
முறமையையும் முற்றாக நிராகரிக்கின்றது.
அதற்கான காரணங்கள் பல்வேறு பட்ட தடவைகளில் விளக்கப்பட்டுள்ளது. எனவே அவை பற்றி இங்குவிரிவாக விளக்க
வேண்டியதில்லை. என்றாலும் பொதுவாக
எங்களது கருத்துகளில் மாகாணசபை முறைமையின் கீழ் எதுவித அதிகாரமும் கிடையாது. உதாரணமாக மாகாணசபையில் எந்தவொரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும் சட்ட அதிகாரத்திற்காக பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதுவும் ஆளுனர் ஒப்பமிட்டாலே அனுப்ப முடியும். பாராளுமன்றம் அதனை அங்கீகரித்தாலே அது சட்டமாக மாறும். இப்படியான முறைமை இருக்கும்போது மாகாணசபை முறைமைய எந்தவொரு சாத்தியமான நிலைமைகளையோ தீர்வுகளையோ ஏற்படுத்த முடியாது என்பது தான் உண்மை. ஆகவே இது தான் எங்களுடைய நிலைப்பாடு பொதுவாக ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள் 'அவன்
இன்றி எதுவும் அசையாது' ஆண்டவனின் சக்தியைப் பற்றி சொல்லுவார்கள் அது மாகாண சபையைப் பொறுத்தவரையில் அது ஆளுனருக்குப்
பொருந்தும் ஆளுனர் இன்றி எதுவும் அசையாது. ஆளுனர்தான் மேலான சக்தி அந்த அடிப்படையில் மாகாண சபையை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று இது தான் எங்களுடைய பொதுவான நிலைப்பாடு. \\

2.வடமாகாணசபைத் தேர்தலை தெற்கில் உள்ள கட்சிகள் தமிழீழத்திற்கான வாக்கெடுப்பாக மிகைப்படுத்தி பேசுவது ஏன்? 
இது அரசாங்கத்தினுடைய திட்டமிட்ட உண்மையான நிகழ்ச்சி நிரலின் பேரில் நடைபெறுகிறது. உண்மையிலேயே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான சமஷ்டிக்கு சம்மதித்தால் யுத்தத்தை நிறுத்தலாம் என்று இந்தியா தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக சம்பந்தருக்கு கூறியிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துவிட்டனர் என்று கூட அவர்
கூறியிருந்தார். அந்த நேரத்தில் அதற்குச் சம்மதித்திருந்தால் யுத்தத்தை நிறுத்தி சமஸ்டி அடைந்திருக்கலாம் என்று சொன்னார்கள். இன்று யுத்தம் முடிந்த பின்னர் அந்த சமஷ்டி என்ற சொல்லே மறைந்துவிட்டது. அது பற்றி இந்தியாவும் பேசுவதில்லை, சம்பந்தனும் பேசுவதில்லை. போர் முடிந்த பின்னர் 13பிளஸ் என்றார்கள். தற்போது 13 என்கிறார்கள். ஆகவே அரசாங்கம் இன்றைக்கு என்ன பார்க்கின்றது என்றால் உண்மையிலேயே 13பிளஸ் ஐ மாற்றி 13 மைனஸ் ஆக கொண்டுவந்து இப்போது எதிர்க்கின்ற மாதிரியெல்லாம் காட்டி இறுதியில் முற்றாகவே நீக்கப்போகின்றோம் என்று சொல்லுகின்றது. அதனால் இன்று 13 கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு தமிழ் தலைமைகளை தள்ளிவிட்டுள்ளது. ஆக இன்று தமிழ் அரசியல் வாதிகள் 13ற்குள்ளேயே நிற்கிறார்கள். 13 பிளஸ் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் எங்களுக்கு 13ஐ தந்தாலே போதும் அதாவது 'பிச்சை வேண்டாம் நாயைப்பிடி' என்ற நிலை மாதிரி வந்துவிட்டது. சமஷ்டியும் வேண்டாம் 13பிளசும் வேண்டாம் இந்த 13ஐ தாருங்கள் என்று நிற்கிறார்கள். இது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வெற்றி இந்த 13ல் தமிழ்தேசிய கூட்டமைப்பை அமர்த்தி வைத்திருப்பதனை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதற்காகத் தான்; அங்கே வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்கள், எல்லாம் செய்யப்பட்டது. இன்று எல்லாம் அடங்கிவிட்டது. இன்று 13ற்குள் ஏற்றப்படக்கூடிய தீர்வு என்று வந்தவுடன் உடனடியாக எல்லா ஆர்ப்பாட்டங்களும் அடக்கப்பட்டுவிட்டது. இன்று ஆர்ப்பாட்டங்கள் சும்மா விக்னேஸ்வரனுக்கு எதிராக நடைபெறுகின்றது. அதுவும் இன்று திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் நடைபெறுகின்றது.இதுவே என்னுடைய வடமாகாணசபை தொடர்பான அபிப்பிராயமாகும். 

3.கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன? 

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய கட்சியைப் பொறுத்தவரையிலும் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக எதுவுமே செய்யமுடியாது. அது யார் பதவிக்கு வந்தாலும் அதில் விக்னேஸ்வரன் வந்தாலும் வேறுயார் வந்தாலும் ஒன்றுமே செய்யமுடியாது. தமிழ் மக்களின் நலன்சார்பாக செய்ய முடியாது. வேண்டுமென்றால்; எதிராக செய்யலாம். நலனுக்கு சார்பாக எதுவுமே செய்யமுடியாது. என்றாலும் கூட இந்த முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்ட முறை அதில் நடந்த சில முரண்பாடுகள் முதலமைச்சாராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் வின்னேஸ்வரன் அவர்களால் வெளியிடப்பட்ட கருத்துகள் பேட்டிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் உண்மை உண்மையிலேயே தெரிவுசெய்யப்பட்ட முறையில் ஏற்பட்ட முரண்பாடுகள் அவர்களுடைய உட்கட்சி முரண்பாடுகள் அது தொடர்பாக நாங்கள் எந்த அபிப்பிராயத்தையும் சொல்லமுடியாது. அது அவர்களுடைய உட்கட்சிப் பிரச்சினைகளை அவர்களே தீர்த்;துக் கொண்டார்கள்.
ஆனால் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் அளிக்கின்ற பேட்டிகள் கருத்துகள் மிகமிக மோசமானவை அதுதான் உண்மையானது. உதாரணமாக இரண்டு மூன்று பேட்டிகளை என்னால் கூற முடியும். டெய்லிமிரருக்கு அவர் அளித்த பேட்டி மற்றையது மிக அண்மையாக இந்துஸ்தான் ரைம்ஸ் இற்கும் அவர் அளித்த பேட்டி. அந்த பேட்டிகளில் அவர்கிட்டத் தட்ட இந்திய இலங்கை அரசுகளில் கருத்துகளை பிரதிபலிக்கின்றார். இந்துஸ்தான் ரைம்ஸ்சில் அவர் அளித்த பேட்டியில் அந்த முரண்பாடு வெளிவந்தது. அதாவது தமிழக அரசியல்வாதிகள் தமிழ் நாட்டு மக்கள் அவர்கள் தங்களுடைய அரசியல் நலனுக்காக தான் இந்த ஈழத்துப் போராட்டங்களை செய்கின்றார்கள் என்றும் எனவே அவர்களுக்கு இவர் ஆலோசனை கூறுகின்றார். நீங்கள் வேறு விடயங்களில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் இந்த இனப்பிரச்சினை விடயங்களை நாங்கள் தீர்த்துக்கொள்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் எங்களுடைய சொந்த தீர்வின் அடிப்படையில் நாங்கள் தீர்க்கின்றோம். நீங்கள் இதில் தலையிடாதீர்கள்.இது அவருடைய பேட்டியின் அம்சம். அதே பேட்டியின் இன்னொரு பகுதியில் இந்தியா இதற்கு உதவிசெய்யவேண்டும் என்று இந்திய இந்த இனப்பிரச்சினையை தீர்வுக்கு உதவிசெய்யவேண்டும் அதற்கும் அவர் உதாரணம் சொல்கின்றார். இங்கு ஒரு முரண்பாடு வருகின்றது. ஆகவே அவர் இந்தியா என்று சொல்வது இந்திய மத்திய அரசாங்கத்தை ஆனால் தமிழ் நாட்டு அரசாங்கத்தை ஒதங்க சொல்கின்றார். இந்திய மத்திய அரசாங்கம் வரவேண்டும் என்று சொல்கின்றார். இதைத்தான் இலங்கை அரசாங்கமும் சொல்கின்றது. உண்மையிலேயே தமிழ்நாட்டிலே ஆர்ப்பாட்டங்கள் வரும் போது இங்குள்ள அரசியல்வாதிகள் சொன்னார்கள் அதே நாங்கள் புறக்கணிக்கலாம். இந்திய மத்திய அரசாங்கள் எங்களுக்கு ஆதரவாகவுள்ளது அதனடிப்படையில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் செய்வதை கவனிக்க தேவையில்லை. அதைத்தான் இன்று விக்னேஸ்வரனும் கூறுகிறார். தமிழக அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் கூறுகின்றார். நீங்கள் ஒதுங்குங்கள் நீங்கள் இதைப்பற்றி பேசாதீர்கள் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம்
என்று சொல்கிறார். இது யாருடைய குரல்? யாருடைய கருத்து? இங்கு வெளிப்படுகின்றது என்றால் இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதுமேயாகும். உண்மையிலேயே இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இதுதான் தேவை தமிழகத்தை அடக்கி வைப்பது அதை இவருடை வாயினூடாக செய்யப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழகத்தை அடக்கிவைப்பது தேவையாகவுள்ளது இன் செய்யப்படுகின்றன. அதேபோலவே புலம்பெயர் தமிழருக்கும் செய்யப்படுகின்றது. எனவே இங்கு இவர் கூறும் கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தினதும் இலங்கை அரசாங்கத்தினதும் கருத்துக்களை பிரதிபலிப்பது போலவே எனக்கு இது தான் இங்குள்ள மிகப்பெரிய பிரச்சனை. இவ்வாறான கருத்தை ஒரு வருடத்திற்கு முன்னர் சென்னை லொயாலா கல்லூரியில் உரை நிகழ்த்தச் சென்றிருந்த சுமந்திரன் அவர்களும் கூறியிருந்ததை குறிப்பிடத்தக்கது.

 4. விக்னேஸ்வரனின் தெரிவில் இந்தியாவின் பங்கேதும் உண்டா? 

ஊடகங்களில் வரும் செய்திகளை பார்க்கும் போது உண்மை போலவே தெரிகின்றன. ஏன் என்றால் தெரிவிலே முரண்பாடு இவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டு இவர் முதலமைச்சராக வர வேண்டும். வேட்பாளராக வரவேண்டும் என்ற கருத்து வரும் போது, இவர் உடனடியாகவே நிராகரிப்பது எனக்கு ஆன்மீகத்திலும் மற்றைய துறைகளிலும் தான் ஈடுபாடு, அரசியலில் எனக்கு அக்கறையில்லை எனக்கு தேவையுமில்லை என கருத்தை சொன்னவர். இதே வேளை மாகாணசபை தேர்தல் நடைபெறாது அது நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை ஆனபடியால் இது தேவையில்லை நான் வர மாட்டேன் என்று கூறினார.; பின்னர் அந்த கருத்து அப்படியே இழுபட்டு மாகாண சபை அறிவிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர் கருத்து மாறினார். நானும் ஒரு வேட்பாளராக வரத்தயார் ஆனால் எல்லோரும் ஒன்றுபட்ட கருத்துக்கு வரவேண்டும் என்றார.; இதனால் பல முரண்பாடுகள் வந்தன. முரண்பாடுகள் வந்த நிலையில் உண்மையிலேயே எல்லோருக்கும் தெரியும் திரு விக்னேஸ்வரனின் தெரிவு ஏகோபித்த முடிவல்ல. நிறைய முரண்பாடுகளுக்கு மத்தியில் தான் எடுத்துக்கொள்ளப்பட்ட முடிவு அப்படி இருந்தும் கூட அந்த தீர்வு ஏற்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க வேண்டும் அது அவர்களின் கட்சி பிரச்சனை. ஆனால் அதற்கு பின்னால் வந்த செய்திகள் இந்தியா தலையிட்டது என்றும் மாவை சேனாதிராஜா இந்திய தூதரகத்துக்கு சம்பந்தரால் அழைத்து சொல்லப்பட்டது என்றும் செய்திகள் வந்தது. இந்த செய்திகளில் இந்தியாவின் பின்னணி இருந்ததா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது இதை யாருமே மறுக்கமுடியாது.

5. புலிகள் ஆயுத பலத்தில் இலங்கை அரசுக்கு சமநிலையாக இருந்த வேளை தமிழ்த் தலைமைகளை ஒன்று படுத்தி தமிழ்க்கூட்டமைப்பாக உருவாக்கினர். ஆனால் 2009ம் ஆண்டு புலிகளின் தோல்விக்குப் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் கொள்கைப் போக்குகள் தமிழ் மக்களின் உரிமையினை சரியான வகையில் கையாளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு இன்று எழுந்து கொண்டிருக்கின்றது. இதனை தமிழ்த்தேசிய மக்கள்
முன்னனி எவ்வாறு நோக்குகின்றது? 
இக்குற்றச்சாட்டை மறுக்க முடியாது, உண்மை இருக்கின்றது. 2009ம் மே 18 யுத்தம் முடிந்த பின்னர் திரு சம்பந்தர் அவர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் முன்னர் அவர் இருந்த நிலைகளிலிருந்து மாறியதை சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த படையினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
மற்றையது தான் ஒருபோதும் தமிழீழத்தை கோரவில்லை கேட்கவில்லை என்ற கருத்தை முன்வைத்தார்.ஆனால் உண்மையிலேயே 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழீழத்துக்கான என்று தான் தேர்தல் நடத்தப்பட்ட போது திருகோணமலையை தமிழரசுக்கட்சியினுடைய தமிழர் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அப்படி உண்மையில் தமிழீழத்தை தான் ஒரு போதும் கோரவில்லை என்றால் அன்றே தேர்தலில் போட்டியிட்டு இருக்கக்கூடாது. அன்றைய தேர்தல் தமிழீழத்துக்கான தேர்தல் என்று தான் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அரசால் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூறுகின்றார் நான் அதை ஏற்கவில்லை,தமிழீழத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவு இல்லை என்ற ஒரு கருத்தை சொல்கின்றார். இவ்வாறான
கருத்து மாற்றமே மே 18ற்கு பிறகு சம்பந்தரிடமிருந்து வந்தது.
இது உண்மையான தமிழ் மக்களின் உரிமை நிர்ணயம் இறைமை போன்ற அதிகார விடயங்களோடு இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகிச் செல்கின்றது என்றே தோற்றமளிக்கின்றது. அது தான் மக்களுடைய உணர்வும் ஆனால் வேறு மாற்று வழி இல்லை என்ற கருத்தும் இருக்கின்றது. அவர்கள் விலகிச்செல்கின்றார்கள் என்பது உண்மை அவர்களை விட்டால் மாற்று வழி இல்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த இரண்டுமே மக்கள் மத்தியிலுள்ள கருத்து 'மாற்றுவழியில்லை ஆனால் இவர்கள் விலகிச் செல்கிறார்கள்' இதுவே உண்மை.

06) தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிரவேறு மாற்றுக்கட்சியின் தேவை உணரப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் புத்திஐவிகளுடைய கருத்துக்கள் வெளிவருகின்றன. மாற்றுக் கட்சியினுடைய உருவாக்கத்திற்கு ஏற்றால் போல் நிலைமை உள்ளதா? 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அவ்வாறான கருத்துக்களாலேயே உருவானது. கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டு சுயநிர்ணயம், இறைமை போன்ற விடயங்களை வலியுறுத்திய பின்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தாங்களும் இதைத்தான் சொல்லுகின்றோம் என்றார்கள். அதுவரைக்கும் சுயநிர்ணம் என்ற வார்தைகள் எதனையுமே கூறவில்லை. எப்போது தமிழ்தேசிய மக்கள்
முன்னணி தோன்றிற்றோ அன்றிலிருந்து நாங்களும் அதைத்தான் கூறுகின்றோம் என்றார்கள். அப்போ அவர்களுக்கு தெரியும் மக்களும் அதைத்தான் ஏற்கின்றார்கள் என்று அப்படியான மாற்றம் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் தான் கொண்டுவரப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே அவர்கள் இல்லாத இடத்தில் நாங்கள் அதையும் பாதுகாக்க வேண்டும் கூட்டமைப்பை உடையவிடக் கூடாது என்ற உணர்வே தமிழ் மக்களுடையது. ஆனால் கூட்டமைப்பினர் தவறான பாதையில் போகின்றார்கள் ஆனால் இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற நிலை வரும் அது மிக விரைவில் வரும். அப்போது எந்த மாற்றமைப்பு பலமாகவுள்ளதோ அதைத் தேடி மக்கள்
செல்வார்கள்.
« PREV
NEXT »

No comments