Latest News

August 08, 2013

திருக்கோயிலில் முருகன் முன் புத்தர் திடீர் வரவு
by admin - 0

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான பாணமையிலிருந்து 5 மைல் பயணித்ததும் சந்நியாசிமலையில் உள்ள முருகன் ஆலயத்திலன் முன்பாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
வள்ளியை மணந்து கதிர்காமத்தில் வாழ்ந்த முருகனைத் திருப்பி அழைப்பதற்காக கொங்கோட்டியார் சந்நியாசியார் கலாயாணகிரி ஆகிய மூவரையும் தெய்வானையம்மன் கதிர்காமத்திற்கு அனுப்பினார் என்றும் பாணமையிலிருந்து வந்த சந்நியாசியார் மேற்படி இடத்தில் அடங்கினார் என்றும் கொங்கோட்டியர் புத்தலையிலிருந்து 4 மைல்களுக்கு அப்பாலுள்ள மடத்தில் அடங்கினார்.கல்யாணகிரியார் மட்டும் கதிர்காமம் சென்றார் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
உன்னரசுக்கிரி என்பது திருக்கோவிலின் தென்பாலுள்ள உகந்தைமலைக்கும் பாணமை என்ற பாலர்நகைநாடு என்ற பண்டைய துறைமுகத்திற்குமிடையே இருந்திருக்கின்றது. அதனாலும் வேறு சான்றுகளாலும் தற்காலம் சன்னாசிமலை என்ற பெயருடன் வழங்கப்படுகின்றது என மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.
சந்நியாசிமலை பாணமைக்கும் உகந்தைக்கும் இடையே அமைந்துள்ளது. அங்கு யாத்திரை செல்வோர் புத்திர பாக்கியம் இல்லாதோர் இருப்பின் சந்நியாசியையும் தமது கோரிக்கையையும் நினைந்து இம்மலையில் கல் தூக்கி வைப்பர் என்றும் தமது கோரிக்கை நிறைவேறின் அடுத்த பயணத்தின்போது பொங்கலிட்டு ஏற்றிய கல்லை இறக்கிவைப்பர் என்பதும் மக்கள் நம்பிக்கை.
உகந்தைமலை முருகனிடம் செல்வோர் இவ்விடத்தில் இறங்கி வழிபட்டுச் செல்வது தொன்றுதொட்டு வழக்கம். தற்போது அம்மலையிலுள்ள வேலுக்கு முன்னால் புத்தர்சிலை வைக்கப்பட்ட சிறு கூடம் அமைக்கப்பட்டுள்ளமை பக்கர்தர்களிடையே அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
அந்த வீதியால் பயணிப்போருக்கு வேல் தெரியாத வகையிலும் புத்தர் சிலை தெரியும்படியாகவும் அமைக்கப்படடுள்ளது. தமிழர் தாயகத்தில் உள்ள இந்து ஆலயங்களை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் மெற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் டிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பானமை விநாயகர் ஆலயத்தை பாணமை விகாராதிபதி சங்கரத்ன தேரர் தலைமையிலான கு தகர்த்தமையால் பல சர்ச்சைகள் எழுந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments