Latest News

August 07, 2013

இலங்கை அதிபர் ராஜபக்ஷே பண உதவி செய்ததாக தகவல்கள் வந்ததே உண்மையா?’
by admin - 0

இந்த நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களை நடிகர் ஜான் ஆபிரகாம் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை படமாக்கியுள்ளோம் யாருடைய மனமும் புன்படும் விதமாக இந்தப் படம் அமையாது. இலங்கையில் நடந்த விஷயங்களை காண்பித்திருக்கிறோமே தவிர, அதை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ படத்தில் எந்த கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை. அதையும் மீறி சிலர் அரசியல் நடத்த நினைத்தால்
நான் என்ன செய்ய முடியும். இந்நிலையில் இந்தப்படத்தின் தமிழ்
பதிப்பை விளம்பரப்படுத்த இன்று சென்னை சத்யம் திரையரங்கம் வந்த கதாநாயகன் ஜான் ஆபிரகாம் “நான் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கல, எதிர்க்கல, இலங்கை அரசையும் ஆதரிக்கல, எதிர்க்கல இதை ஒரு கற்பனைப்படமாக பண்ணியிருக்கேன்” என்றார். தொடர்ந்து ஒரு நிருபர் இந்தப்படத்துக்கு ‘இலங்கை அதிபர் ராஜபக்ஷே பண உதவி செய்ததாக தகவல்கள் வந்ததே உண்மையா?’என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.அதற்கு ஜான் ஆபிரகாம் மேடையின் கீழே நின்று கொண்டிருந்த படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களை கை காட்டி இவர்கள்தான் பணம் போட்டவர்கள் என்றார். விடுதலைப்புலிகளைப் பற்றியோ, ஈழத்தமிழர்களைப்
பற்றியோ, இலங்கை அரசைப் பற்றியோ எந்த விமர்சனமும் இந்தப் படத்தில் இல்லை. நானும் ஒரு இந்திய குடிமகன்தான். எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றது. இந்த சமூகத்தைப் பற்றிய தவறான கருத்தை நான்
சொல்லமாட்டேன். இந்தப் படத்தை சில தமிழ் அமைப்புகள் முன்கூட்டியே திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்றனர். அவர்கள் கோரிக்கையின்படி படத்தை திரையிட தயார். அவர்கள் படம் பார்த்த பிறகு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. படம் வெளிவருவதற்கு முன்பாக இதுபோன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். படம் வெளிவந்த பிறகு நாம் இந்தப் படத்தின் விஷயங்களை விவாதிப்பதே ஆரோக்கியமானது என்ற இந்தப் படம் எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சே பணம் கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.
« PREV
NEXT »

No comments