Latest News

August 03, 2013

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை
by admin - 0

 இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களது கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் மார்டீன் நெசர்கீயிடம்
இன்னர் சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்த விடயங்கள்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஊடக சுதந்திரம் தொடர்பில் பாரியளவில் சர்ச்சைகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊடக
சுதந்திரம் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  வெலிவேரிய தாக்குதல் சம்பவம் குறித்து தற்போதைக்கு எதுவும் குறிப்பிட முடியாது என அவர்
குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின்
பங்களிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைப் பரிந்துரைகள் கவனத்திற் கொள்ளப்படும் என நெசர்கீ தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments