Latest News

August 14, 2013

எழிலனின் மனைவியை சந்திப்பாரா இலங்கை செல்லும் நவநீதம் பிள்ளை
by admin - 0

இன்னும் சில வாரங்களில் இலங்கை செல்லவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவி நவநீதம் பிள்ளை அவர்கள் , இலங்கையில் எப்பகுதிக்கு வேண்டும் என்றாலும் செல்லலாம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதாவது நவநீதம் பிள்ளை அவர்களை தாம் கட்டுப்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் காணாமல் போயுள்ள நபர்கள் தொடர்பாக தொடர்ந்து தனது கரிசனைகளை வெளியிட்டு வருகிறார், நவநீதம் பிள்ளை. இன் நிலையில் முள்ளிவாய்க்காலில் கடைசிவரை இருந்து, பின்னர் தனது கணவர் உட்பட பலர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவதை நேரில் பார்த்த சாட்சியாக இருக்கு எழிலனின் மனைவி ஆனந்தியை நவநீதம் பிள்ளை ஏன் சந்திக்கக்கூடாது ? புலிகளின் கிழக்கு மாகாண அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் அவர்கள் தனது மனைவியுடன் சென்று, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் இன்றுவரை அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குறிப்பாக இவருடன் பலர் சரணடைந்திருந்தார்கள். இலங்கையில் உள்ள மனித உரிமைச் சபை, நல்லிணக்க ஆணைக்குழு, நடத்திய விசாரணைகளில் மிகவும் துணிவாகக் கலந்துகொண்டு உண்மையை உரைத்தவர் எழிலனின் மனைவி ஆனந்தி.
எனவே இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். நேரடிச் சாட்சியாக உள்ள ஆனந்தியை, நவநீதம் பிள்ளை நிச்சயம் சந்திக்கவேண்டும். இதனூடாகவே நடைபெற்ற படுகொலைகளை அவர் நிச்சயம் நவநீதம் பிள்ளை அவர்களுக்கு கூற முடியும். அத்துடன் காணமல் போனவர்களுக்கு உதவும் சங்கத்தினை முன்னெடுத்துவரும், மனோகனேசன் போன்றவர்களும் நவநீதம் பிள்ளையை சந்திக்கவேண்டும். அதனூடாகவே அவருக்கு உண்மை நிலையை எடுத்துரைக்க முடியும். இதனை இலங்கை அரசு ஒத்துக்கொள்ளுமா என்பதே பெரும் சவாலாக உள்ளது. இலங்கை சென்று திரும்பிய முன்னாள் ஐ.நா அதிகாரிகள் விட்ட அதேபிழையை நவநீதம் பிள்ளையும் விட்டுவிடக்கூடாது.
« PREV
NEXT »

No comments