Latest News

August 14, 2013

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென இலங்கையின் மீது உத்தரவுளை நிர்ப்பந்திக்கவில்லை : ஐ.நா.
by admin - 0

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்திய போதிலும் அவ்வாறான உத்தரவுளை இலங்கையின் மீது நிர்ப்பந்திக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் விருப்பம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நென்டி தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்க முனைப்புக்கள் வெளியிலிருந்து திணிக்கப்படவோ இறக்குமதி செய்யப்படவோ கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்கம் குறித்த காத்திரமான திட்டங்கள் இலங்கையிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் நல்லிணக்கம் குறித்த யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த சிந்தனை மற்றும் உள்ணமையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நல்லிணக்கத்திற்கான காத்திரமான பரிந்துரைகள் காணப்படுவதாகவும் அவற்றை அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தேசிய மொழிகள் அமைச்சு முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

« PREV
NEXT »

No comments