Latest News

August 14, 2013

மும்பையில் நீர்மூழ்கி கப்பல் தீவிபத்து: 18 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்: அந்தோணி பேட்டி
by admin - 0

மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 16 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் ஐ.என்.எஸ். சிந்துரக்ஷக் நீர்மூழ்கி கப்பல் எரிந்து சேதமானது. இந்த கப்பலில் இருந்த 18 வீரர்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் கப்பல் தீவிபத்து பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அமைச்சர் அந்தோணி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்த அவர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். 
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விபத்து குறித்து விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி,
மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில், கப்பலுக்குள் சிக்கிய மாலுமிகள் 18 பேரின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார். 
கடற்படை தளபதி டி.கே.ஜோஷி, விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் ஆய்வு செய்து வரும் நிலையில் அந்தோணியும் மும்பை செல்ல உள்ளார்.

« PREV
NEXT »

No comments