இன்று மாலை 5.15 மணியளவில் யாழ்.நகரப் பகுதியில் வைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை வேட்பாளர் எஸ்.தம்பிராசா, மற்றும் காரைநகர் பிரதேச சபையின் தலைவர் ஆனைமுகன் ஆகியோர் பயணித்த வாகனங்களை, அங்கஜனின் ஆதரவாளர்கள் மற்றும் தந்தையார் வாழிமறித்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கியுள்ளதுடன், வேட்பாளரை வாகனத்தின் பாரம் உயர்த்தியினால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார்.
மேலும் பெரிய தமிழ்த் தேசியப் பற்றாளர்களா நீங்கள்? என்ற கேள்வி எழுப்பிக் கொண்டே கைத்துப்பாக்கியை எடுத்து வேட்பாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவும் முயற்சித்துள்ளார்.
அதற்குள் அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடிவிட அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கஜனின் தந்தை அருகிலுள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் சென்று ஒழிந்து கொண்டார்.
இதனையடுத்து கூட்டமைப்பின் வேட்பாளர் தம்பிராசா குறித்த துப்பாக்கிதாரியை எதற்காக கைது செய்யவில்லை என பொலிஸாருடன் வாதாடியதுடன், அங்கஜனின் தந்தை ஒழிந்திருந்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டார்.
அப்போதும் பொலிஸார் அங்கஜனின் தந்தையாரை கைது செய்யாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர் வர்த்தக நிலையத்தில் பின் கதவால் தப்பித்து ஓடிவிட்டார்.
இதனையடுத்து தம்பிராசாவை பொலிஸார் முறைப்பாடு பெறுவதற்கான அழைத்துச் சென்றுள்ளனர். இதேவேளை அங்கஜனின் தந்தைக்கு பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் பாதுகாப்பு வழங்கினர்.
மேலும் இதேபோன்றதொரு சம்பவம் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலின்போதும் நடைபெற்றிருந்தது, அங்கஜனின் தந்தை யாழ்.மாநகரசபை முதல்வரின் நெற்றியில் கைத்துப்பாக்கியை வைத்து சுட முயன்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலாவது தேர்தல் வன்முறை இன்று மாலை 6மணிக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
No comments
Post a Comment