Latest News

July 28, 2013

முஸ்லிம் காங்கிரஸ் TNA இற்கு மறைமுகமாக உதவுகிறது: தேசிய சுதந்திர முன்னணி விசனம்
by admin - 0

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே ரவூப் ஹக்கீம் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸஸம்மில் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரவூப் ஹக்கீம் பிரிவினைவாதத்தை ஆதரிப்பது தெளிவாகத் தெரிகின்றது. இதன் காரணமாகவே இம்முறை மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார்.
அத்துடன், ரவூப் ஹக்கீம் மறைமுகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகிறார். ஆனால், இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்ள பலர் விரும்பவில்லை. முஸ்லிம் காங்கிரஸில் இது தொடர்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை பிரிக்கவே முயற்சித்து வருகிறது.
நாட்டில் மூவின மக்களும் சுமுகமாக வாழ்ந்து வரும் நிலையில், சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாதிகள் நாட்டின் அமைதியை சீர்குலைக்கின்றனர். இதற்கு தற்போது ரவூப் ஹக்கீமும் துணை போயுள்ளார். இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் ஒரு செயல்.
இந்த அராஜ செயலுக்கு முஸ்லிம் மக்கள் துணைபோகக் கூடாது. முஸ்லிம் மக்கள் இதை புரிந்து செயற்பட வேண்டும். நாட்டின் பிரிவினைவாதத்தினை ஏற்படுத்தும் வட மாகாண சபை தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடாது.
13ஆவது சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.
« PREV
NEXT »

No comments