Latest News

July 28, 2013

தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் : பா. ஜ. க. தெரிவிப்பு
by admin - 0

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதனை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வின் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் பாராளுமன்ற வெளியுறவுத் துறை நிலைக் குழு தலைவருமான அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் இவற்றை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். 

இந்நிலையில், நியூயோர்கில் அவர் அளித்து பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
« PREV
NEXT »

No comments