Latest News

July 22, 2013

சீமான் திடீரெனக் கைது
by admin - 0

தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபர் தற்கொலை செய்ததையடுத்து அங்கு மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் கலப்பு திருமண பிரச்சினைகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
  
ஆர்ப்பாட்டங்களோ போராட்டங்களோ சாலை மறியல்களோ சாதி சங்க கூட்டங்களோ நடத்தக்கூடாது சாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். 
  
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ரங்கநாதபுரத்தில் இயக்குனர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று வந்தார். விழாவிற்கு புறப்பட்ட அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் சீமான் உள்பட 20 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
« PREV
NEXT »

No comments