Latest News

July 27, 2013

மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களை ஜே.வி.பி அறிவிப்பு
by admin - 0

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களை ஜே.வி.பி தெரிவு செய்துள்ளது. இதனடிப்படையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பியின் முதன்மை வேட்பாளராக சின்னத்துரை ராஜேந்திரன் போட்டியிட உள்ளார். 
வட மேல் மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமால் குணரத்ன போட்டியிடுகிறார். மத்திய மாகாண சபையின் முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கமமே கெதர திஸாநாயக்க போட்டியிடுகிறார்.
மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்களை ஜே.வி.பி எதிர்வரும் 31 ஆம் திகதியும், முதலாம் திகதியும் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது
« PREV
NEXT »

No comments