Latest News

July 28, 2013

வட-கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்க கூட்டமைப்பின் வெற்றி அவசியம் : பொன். செல்வராசா
by admin - 0

பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டபை்பு வெற்றிப் பெற்றால் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களின் அரசியல் உரிமைகள் நிர்ணயிக்கப்படும் என கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
கோட்டைக்கல்லாறில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
13வது திருத்தச் சட்டத்தை வலுவிழக்க செய்யும் சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறான நிலையைில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு தேர்தலில் வெற்றிப்பெற்றால் 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் அதேவேளை அதனை பயன்படுத்தவும் முடியும்.
13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல. எனினும் அதையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இருப்பதே போதாது என்ற நிலையில் அதனையும் பறித்தால் அதில் என்ன இருக்க போகிறது.
இதனை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் மௌனமாக உள்ளனர். வெளியில் வாய் திறந்து பேச முடியாத நிலைமையில் அவர்கள் உள்ளனர்.
கிழக்கில் மூன்று இனங்களும் சமமாக வாழ்கின்றனர்.
வடக்கில் அப்படியல்ல, அங்கு தமிழர்களே பெரும்பான்மையானவர்கள். இதனால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிப்பெற்றால், அதன் மூலம் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிர்ணயிக்க முடியும் என எண்ணுகிறேன் என்றார்.
« PREV
NEXT »

No comments