Latest News

July 29, 2013

இலங்கையில் புலனாய்வு தகவல்களை திரட்டிய ஜேர்மனிய பிரஜை தப்பியோட்டம்
by admin - 0

மிரிஹான பொலிஸின் குடிவரவு குடியல்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனிய பிரஜை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். 
முஸ்லிம் பெயரில் இலங்கையில் தங்கியிருந்து, வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுக்கு தகவல்களை வழங்குவதற்காக இலங்கை சென்றிருந்தாக சந்தேகத்தின் பேரில் அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 
தப்பிச் சென்ற நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்த ஜெர்மனிய பிரஜை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 
பொலிஸாரின் பாதுகாப்பு பொறுப்பின் கீழுள்ள முகாமிலிருந்த குறித்த நபர், கடந்த 24 ஆம் திகதி அதிகாலை தப்பிச் சென்று விட்டதாக அரச புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. 
அலி ஷாகி சதாம் என்ற முஸ்லிம் பெயரில் இலங்கையில் தங்கியிருந்த இந்த ஜெர்மனிய பிரஜை, அரசசார்ப்றற நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கை சென்று புலனாய்வு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 
கைது செய்யப்பட்டு, நடு கடத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே இந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். 
அதேவேளை ஏற்கனவே, ஊடகவியலாளர்கள் போல், இலங்கையில் புலனாய்வு தகவல்களை திரட்டி வந்த இரண்டு பாகிஸ்தான் பெண்கள், அரச புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பிச் சென்றனர். 
அவர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை நடு கடத்தும் வரை தடுத்து வைக்கும் மிரிஹான தடுப்பு முகாமில் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்கள் எழுந்திருப்பதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர். 
« PREV
NEXT »

No comments