Latest News

July 29, 2013

7 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சைக் குழுக்களும் இன்று வேட்பு மனுத்தாக்கல்: தேர்தல்கள் செயலகம்
by admin - 0

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் போட்டியிடும் 07 அரசியல் கட்சிகள், 15 சுயேட்சைக்குழுக்கள் இன்று மதியம் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

29 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தது.
ஐக்கிய இலங்கை மஹா சபை மன்னார் மாவட்டத்திலும் ஜனசெத பெரமுன குருணாகல் மாவட்டத்திலும் இன்று வேட்புனுமக்களை தாக்கல் செய்தன.
அதேவேளை இரண்டு பிரதான கட்சிகள் இந்த வாரத்தில் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இன்று வேட்புமனுக்களில் கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
ஜே.வி.பி எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments