இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் சென்னை அண்ணாசாலை புக்பாயின்ட்அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சி.கபிலன் நிகழ்த்த அரங்க நிகழ்வுகளை கவிபாஸ்கர் தொகுத்து வளங்கினார்.அறப்போர் ஆவணப்படத்தினை கவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கருத்துரைகளை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்,தமிழ்தேசபொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன்,ம.செந்தமிழன்,வெற்றிவேல்சந்திரசேகர், ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை இயக்குனர் அமீர் நிகழ்தினார்.தொடர்ந்து அறப்போர் ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நினைவு பரிசில்களை இயக்குனர்அமீர் வழங்கி மதிப்பளித்துள்ளார்.
No comments
Post a Comment