Latest News

July 28, 2013

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் - காசி ஆனந்தன்
by admin - 0

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு  காசி ஆனந்தன் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் சாராம்சம்:

தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன். உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அவர்களின் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள். சிங்களவர்கள் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராயறாஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்.இன்று அப்படி இந்த மண்ணில் இருந்து ஓடிவந்து காப்பதற்கு யாரும் இல்லை.இன்று ஏதும் இல்லாத தமிழனுக்கு யாரும் இல்லை இப்படிப்பட்ட மன்னர்களின் உணர்வுகளை மாணவர்களிடம் தான் அந்த எழுச்சியினை பார்க்கமுடிந்தது.என்றும் தெரிவித்த காசியானந்தன் அவர்கள்.

இன்று ஈழமண்ணில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஒன்றும் இல்லாத ஒன்றாக 13ஆவது சட்டதிருத்தம் காணப்படுகின்றது  முழுக்க முழுக்க சிங்களவர்களால் சிக்கிய அடிமகளாக தமிழர்களை ஆக்குகின்ற முயற்சிதான் 13ஆவது சட்டதிருத்தம் இன்றைக்க அதுதான் தமிழர்களுக்கு எல்லாமான தீர்வு என்று சொல்லப்படுகின்றது அது பச்சைப்பொய் அதில் எதுவுமேகிடையாது. 

1833 ஆம் ஆண்டு கோல்புறுக்கால் சொல்லப்பட்டதுதான் தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கின் எல்லைகள் என்று.அவன் தமிழ்தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இணைப்பதற்காக வந்தவன் அதுதான் தமிழர்களின் தாயகம் என்று சொன்னான்.

தாயகத்தின் இன்று சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியினை காட்டினார்கள் இங்கு மாணவர்கள் எழுச்சியினை மேற்கொள்ள அமெரிக்காவின் அதிகாரிகள் கூட இந்த போராட்டத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில் மாணவர்களுடைய போராட்டம் தான் சிங்களவர்களுடைய எதிரிநாடு என்று தமிழ்நாட்டில் தீர்மானம் போடவைத்தது.

இந்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பான ஒருஆவணமாக வெற்றிவேல் உருவாக்கி எடுத்திருக்கின்றார்.
ஒருபாலச்சந்திரனின் படம் உலகினை உலுக்கியது இப்படியான ஆவணங்கள் உலகினை உலுக்கும்,உலகினை உருவாக்கும்,உலகை தமிழீழவிடுதலை உரிமைபோர் நோக்கி நகர்த்தும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் அப்படி அடிக்கின்ற போழுது தமிழ்நாட்டில் மாணவர்கள் நெருப்பாக எழுந்து தமிழீழத்தில் நடக்கின்ற மிகப்பெரிய எழுச்சியான விடுதலைப்போருக்க தோள் தாருங்கள் என்று நான் மாணவர்களை வேண்டி நிற்கின்றேன் - என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.



« PREV
NEXT »

No comments