சிவராஜா பிரகாஷ் என்ற இளைஞனே பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 2வது மாடியிலிருந்து குதித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், 6 நாட்களுக்கு முன்னர், இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த கைதுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் உறவினர்களுக்கும் அறிவிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது
No comments
Post a Comment