அவிசாவளை, தெரணியகலை நூரி தோட்ட முகாமையாளர் கொலையை அடுத்து அந்த தோட்டத்தில் பதற்றமான நிலைமையொன்று இன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிலாளர்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருவதனாலேயே இவ்வாறான பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களிடம் அவிசாவளை பொலிஸாரே விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அந்த தோட்டத்தைச்சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவிக்கையில், நூரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல விசாரணைகளை நடத்தியவருவதாகவும் அந்த விசாரணைகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment