Latest News

July 28, 2013

தயா மாஸ்டர் ஆளும்கட்சி சார்பாகப் போட்டியிட முடியாது
by admin - 0

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 7 பேரின் விபரங்களை கட்சியின் யாழ். செயலகம் நேற்று வெளியிட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், சட்டத்தரணி முடியப்பு றெமீடியஸ், சாவற்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத் தலைவர் அகிலதாஸ், யாழ்.மாநரசபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ்.கதிரவேல் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் முக்கியமாக இடம்பெறுவார் என்று கூறப்பட்டு வந்த தயா மாஸ்டர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
« PREV
NEXT »

No comments