Latest News

July 10, 2013

முள்ளிவாய்க்காளில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன் தளபதிகளை அழைத்து கூறிய கட்டளை
by admin - 0

ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டால் சண்டை நிறுத்தம் ஏற்படுத்தலாம் என முக்கியமான நாடுகள் கூறுகின்றன. ஆயுதங்களை ஒப்படைப்பதும் சரணடைவதும் தமிழீழக் கனவுக்காக நமக்கு முன் தம்முயிரை ஈகம் செய்த எல்லா போராளிகளுக்கும் நாம் செய்கின்ற துரோகம் ஆகும். ஓர் இயக்கமாக நாம் நமக்கென சில நியதிகளையும், ஒழுங்கு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொண்டு அவற்றின் படியே நம்மை நடத்தி வந்தோம். அவ்வாறே இப்போதும் நடப்போம்.

நம்மை நம்பி, நமது வெற்றி தோல்விகள் யாவற்றிலும் நம்மோடு நடந்து வந்த இம்மக்களை எதிரியிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற கவலை மட்டும் தான் எனக்கு.

நிறையவே நமது மக்கள் துன்பப்பட்டுவிட்டார்கள். போராளிகள் என்ற வகையில் நாம் கௌரவமாக சண்டையிட்டு மடிவோம். இன்றைய வாழ்க்கை நமக்குரியதாய் இல்லாது போயினும் வரலாறு நம்முடையதாகவே இருக்கும். எத்தகைய உறுதியோடும், வீரத்தோடும், நேர்மையோடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதிவரை போராடியது என்ற உண்மை இன்னும் பல்லாண்டுகளுக்கு நம் மக்களுக்கான போராட்டத்தை முன் நகர்த்திச் செல்லும். என்று கூறியதாக தெரிய வருகின்றது.
« PREV
NEXT »

No comments