Latest News

July 16, 2013

வடக்கு, வடமேற்கு, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி
by admin - 0

வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதாக நேற்றிரவு கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் தலைவர் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அதியுயர் பீட கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார். 

இத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போது, அதியுயர் பீட உறுப்பினர்களின் அதிகப் பெரும்பாலானோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது தனித்துவத்தைப் பேணி கட்சியின் மரச்சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என பலமாக வலியுறுத்தியதால் இந்த முடிவை மேற்கொண்டதாகவும் செயலாளர் நாயகம் மேலும் கூறினார். 
செயலாளர் நாயகம் ஹஸன் அலி, எம்.பி இதுபற்றி மேலும் தெரிவித்தவையாவன:
வடமாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைச் சரிவர பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளும், முஸ்லிம்கள் சார்பான குழுக்களும் ஒன்றிணைந்து போட்டியிடுவதே உகந்தது என்று இக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது. 
இவ்வாறான வேண்டுகோளை கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் முன்னரே முதன் முதலாக விடுத்து, அதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான சாதகமான சமிக்ஞைகள் அல்லது இணக்கம் இதுவரை எந்தத் தரப்பிலிருந்தும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு வடமாகாண சபைத் தேர்தலில் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் முன்வந்தால், அதனை மிகவும் சாதகமாகப் பரிசீலிப்பதற்கும், உடன்பாட்டுக்கு வருவதற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது.
தேர்தலுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்கும், பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் மூன்று மாவட்டங்களுக்கும் தனித்தனியாக குழுக்கள் தெரிவுச்செய்யப்பட்டன. இக் குழுக்கள் கட்சித் தலைவரின் கண்காணிப்பின் கீழ் செயல்படும். நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரசாரப் பணிகளை தீவிரமாக முடுக்கிவிடவுள்ளது. கட்சியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் தலைவர் அமைச்சர் ஹக்கீமும், தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகுதாவ+த்தும், செயலாளர் நாயகமான நானும் முக்கியமாக கலந்துகொள்ளவுள்ளேன் என்றார்.
« PREV
NEXT »

No comments