Latest News

July 28, 2013

டக்கிளஸின் வெற்றியும் தயாவின் தோல்வியும் கோத்தாவின் தந்திரமும்
by admin - 0

ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியில் வடக்கு மாகாண சபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமைக்கு ஸ்ரீலங்காவின் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே காரணம் என்று இரகசிய தகவல் கசிவு.
அதாவது வெற்றிலை சின்னதில் EPDP போட்டியிடுவதாக இருந்தால் தயா  மாஸ்டர் போன்ற முன்னாள் விடுதலைப்புலிகள் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியில் போட்டியிடக்கூடாது என்று டக்கிளஸ் நிபந்தனை விதித்தார்.இதனால் மகிந்தாவின் கட்டளைக்கு அமைய அவர்கள் ஸ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் போட்டியாளர்களில் இருந்து இவர் வெளியேற்றபட்டார்.

இதில் மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை அதாவது கூட்டமைப்புக்கு கிடைக்கும் மாகாண ஆசனங்களை குறைக்கும் முகமாக கோத்தபாயவின் திட்டத்துக்கு அமைய தயா மாஸ்டரின் தலைமையில் சுயேட்சை குழுவை இறக்கி  தேர்தலை சந்திக்கின்றார். இதில் என்ன அரசியல் என்றால் முன்னாள் போராளிகளை சுயேட்சை குழுவாக இறக்குவதால் அதாவது ஸ்ரீலங்கா சுகந்திர கட்சியில் போட்டியிடுவதாக இருந்து ஓரம் கட்டப்படுபவர்களாக வெளிக்காட்டப்பட்ட தயா மாஸ்டர் போன்றவர்களை இறக்குவதால் அவர்களை அரசுக்கு எதிரானவர்கள் போல சித்தரித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விழக்கூடிய  வாக்குகளை பிரித்து கூட்டமைப்பை பலவீனமாக்கும் அரசியல் தந்திரம்,அதன் ஒரு கட்டமே அரசுக்கு எதிரான யாழ் செயலகத்துக்கு  முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழனை வைத்து தமிழனை அடிக்கும் சிங்களம் இன்னும் ஓயவில்லை.மக்களே விழிப்பாக இருங்கள் தமிழர்கள் ஒற்றுமையான முடிவே எமது பலம் எதிரியின் சூழ்ச்சியை முறியடிப்போம்.இந்த தேர்தல் எம்மீது  திணிக்கப்பட்டது,நாங்கள் விருப்பியது இல்லை. இந்த தேர்தலால் எமக்கு கிடைப்பது ஒன்றுமில்லை,ஒற்றுமை மட்டுமே வெளிக்காட்டப்படும்.  இன்று இயன்றதை செய்வோம் இயலாததை முயற்சிப்போம் நாளை விடுதலை எம்கையிலே. 
« PREV
NEXT »

No comments