Latest News

July 28, 2013

இலங்கை-பிரித்தானியா ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்படுமா ?
by admin - 0

தற்சமயம் இலங்கை சென்றிருக்கும் , பிரித்தானிய எம்.பி சயமன் டங்கஸ் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இதனால் இலங்கை அரசு ஆத்திரமடைந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராஜதந்திர உறவு பாதிக்கும் அளவு நிலமை மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்காலையில் வைத்து கொல்லப்பட்ட பிரித்தானியப் பிரஜை தொடர்பாக இலங்கை அரசு சரியான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார் சயமன் டங்கஸ். அவர் கடந்த ஆண்டு இதுதொடர்பாக இலங்கை சென்றவேளை அவரை அவமதித்து அனுப்பியது இலங்கை. ஆனால் இம் முறை அவர் உத்தியோகபூர்வமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். இவர் ஒரு குழுவுடன் சென்றுள்ளார். இக்குழுவே காமன் வெலத் மாநாடு தொடர்பாக இலங்கைக்கு அறிவுரை கூறும் குழு ஆகும். 

இதனைப் பயன்படுத்தி சயமன் டங்கஸ், தான் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டார். ஏற்கனவே அவரைச் சந்திக்க மகிந்தர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் தங்கியிருந்து பல வெளிநாட்டு மீடியாக்களுக்கு அவர் நேர்காணல்களை வழங்கிவருகிறார். அதில் அவர் இலங்கை அரசை சாடிவருகிறார். இதனால் இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது. இவர் கருத்துக்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சை தொடர்புகொண்டுள்ளதாம். ஆனால் பிரித்தானியாவைப் பொறுத்தவரை அங்குள்ள எம்.பீக்களின் கருத்தை, அல்லது அவர்களின் சுதந்திரத்தில் அந்நாட்டின் வெளிவிகார அமைச்சு தலையிடுவது கிடையாது என்பது யாவரும் அறிந்ததே.

« PREV
NEXT »

No comments