வடமாகாண சபைத் தேர்தல் மூலம் புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று திங்கட்கிழமை நண்பகல் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் அங்கு கூடிநின்ற ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்....
ஒத்துழைப்பை, ஒற்றுமையினை எடுத்துக்காட்டும் போது அதனூடாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அது உதவியாக அமையும். வடக்கு மண்ணில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களும் தங்களது ஆதரவை எமக்கு அள்ளி வழங்க வேண்டும். நீண்ட காலமாக தமிழினத்தின் மனங்களை வென்றிருக்கும் எமது கட்சி இத் தேர்தலில் வெற்றி வாகை சூடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது.
13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நடைமுறைச் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு மக்கள் ஆதரவே எமக்கு மிக முக்கியமானதொன்றாகவுள்ளது. நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து பிரச்சினைகள் குறித்து இராஜதந்திர அடிப்படையில் அரசுடன் பேசுவோம். பேச்சுவார்த்தை சாத்தியப்பாடாது போனால் அடுத்த நகர்வுகுறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் வட மாகாண சபைக்கான தேர்தல் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. வடக்கு மக்களுக்கு இப்போது அந்தச் சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. இத் தேர்தலில் தமிழினத்தின் ஒற்றுமை வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமாக எமது இலக்கை அடைய முடியும். மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
ஒத்துழைப்பை, ஒற்றுமையினை எடுத்துக்காட்டும் போது அதனூடாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அது உதவியாக அமையும். வடக்கு மண்ணில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களும் தங்களது ஆதரவை எமக்கு அள்ளி வழங்க வேண்டும். நீண்ட காலமாக தமிழினத்தின் மனங்களை வென்றிருக்கும் எமது கட்சி இத் தேர்தலில் வெற்றி வாகை சூடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கிடையாது.
13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நடைமுறைச் சாத்தியமாக்கிக் கொள்வதற்கு மக்கள் ஆதரவே எமக்கு மிக முக்கியமானதொன்றாகவுள்ளது. நாம் ஈட்டப் போகும் மகத்தான வெற்றியை அடுத்து பிரச்சினைகள் குறித்து இராஜதந்திர அடிப்படையில் அரசுடன் பேசுவோம். பேச்சுவார்த்தை சாத்தியப்பாடாது போனால் அடுத்த நகர்வுகுறித்து அந்தச் சந்தர்ப்பத்தில் தீர்மானிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment