Latest News

July 31, 2013

இனி லண்டனில் கண்ட இடத்தில 'தூ'.. கூடாது.. மீறினால் ரூ.10 LKR லட்சம் அபராதம்
by admin - 0

லண்டன் மாநகரில் இனி கண்ட இடத்தில் துப்ப முடியாது.. மீறி துப்பினால் அவர்கள் 4.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதுதான். அதோடு அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தை சுத்தமாகவும், சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும் லண்டன் நகர நிர்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி லண்டனின் என்பீல்டு பகுதியில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்புவர்கள் மீது குற்றச் செயல் புரிந்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் என்பீல்டு கவுன்சில் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்ப்பதற்கு முயற்சி எடுத்து வந்தது. இந்த நடவடிக்கைக்கு சமூக மற்றும் உள்ளாட்சிக்கான அமைச்சர் எரிக் பிக்கல்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளார். இந்த சட்டத்தை முதன் முதலில் பிரிட்டனில் அமல்படுத்தியது என்பீல்டு கவுன்சில் என்றும், இவ்விதி அமலில் இருந்தபோதும், ஒரு மாத காலத்திற்குள் கடுமையாக பின்பிற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பீல்டை தொடர்ந்து லண்டனின் பிற பகுதிகளிலும், வெகு விரைவில் இதுபோன்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதேபோல் டான் காஸ்டர் பகுதியில் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தாலும், இன்னும் சட்டமாகவில்லை. இந்த சட்டத்திற்கு வரவேற்புள்ள போதும், இதனை கிரிமினல் குற்றமாக பார்க்க எதிர்ப்பு எழுந்துள்ளது.
« PREV
NEXT »

No comments