வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸிடம் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேரடியாக சந்தித்து உரையாடிய அமெரிக்கத் தூதுவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் போன்ற இடங்களில் படையினர் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்தது என்றும் அமைச்சர் பீரிஸிடம் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பு தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை. இலங்கை வெளியுறவு அமைச்சும் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேவேளை வடமாகாணத்தக்கு சென்று மக்களை சுதந்திரமாக சந்திப்பதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் எனவும் தூதுவர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகின்றது.
தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்கு அரசாங்கம் சகலவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என அமைச்சர் பேராசியரிர் பீரிஸ் உறுதியளித்ததாகவும் கொழும்பு தகவல்கள் கூறியுள்ளன.
No comments
Post a Comment