Latest News

July 26, 2013

மனிதருக்கு நன்மை பயக்கும் புதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு
by admin - 0

மனிதருக்கு நன்மை பயக்கக் கூடிய நுளம்பு வகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நுளம்புகள், மிகவும் ஆபத்தான டெங்கு நுளம்பு முட்டைகளை உணவாக உட்கொள்ளக் கூடியவை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய நுள்பு வகைக்கு டொபோமியா என பெயரிடப்பட்டுள்ளது.
124 வருடங்களின் பின்னர் டொபோமியா வகை நுளம்புகள் இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நுளம்பு வகையுடன் இலங்கையில் மொத்தமாக 17 வகை நுளம்பினங்கள் வாழ்ந்து வருகின்றன. சுகாதார ஆய்வு நிறுவகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த நுளம்பு வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நுளம்புகள் மனித இரத்தத்தை உறிஞ்சுவதில்லை எனவும் மாறாக, மரங்களின் சாறுகளை உறிஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை நுளம்புகளை பெருக்குவதன் மூலம் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments