தயாசிறி ஜயசேகர ஒரு அரசியல் கையாலாகாதவர் என நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி என்பவர் தெளிவான கொள்கை உடையவர் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் தயாசிறி அவ்வாறானவர் அல்ல எனவும் 24 மணத்தியாலங்களில் கொள்கை மாறக் கூடியவர் எனவும் கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டார்.
நாட்டு மக்களிடம் இருந்து நன்றாக வாக்குகளை பிச்சை எடுக்கலாம் என்பதனாலேயே தயாசிறியை அரசாங்கம் இணைத்துக் கொண்டதாக அவர் கூறினார்.
நடு வீதியில் உள்ள பிச்சைக்காரர்கள் மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வார்கள்.
ஆனால் தயாசிறி ஜயசேகர மேடைகளில் ஏறி, பாடல் பாடி, ஆடி மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற கூடியவர் என விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கின்ற திருடர்கள், குண்டர்கள், ஏமாற்றுக்காரர்களது விபரங்களை வெளியிட்ட தயாசிறி ஜயசேகர இன்று அவர்களோடு ஒருவராக கலந்துள்ளதாக விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment