லிபியாவை ஒட்டிய கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு படகு ஒன்று நீரில் மூழ்க, ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் குடியேற முயன்றவர்கள் 31 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன.
மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்குள் வர முயன்ற பெரும்பான்மையாக நைஜீரியர்கள் ஏறி வந்த ஒரு படகு இது.
இப்படகு கடலில் மூழ்கியதை அடுத்து இத்தாலிய கரையோர பாதுகாப்புப் படையினர் அப்பக்கமாகச் சென்ற வர்த்தகக் கப்பல் ஒன்றுக்கு தகவல் தந்ததிருந்தனர். அந்தக் கப்பல் உதவிக்குச் செல்ல 22 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்கள் இத்தாலிக்குச் சொந்தமான லாம்படூஸா தீவில் உள்ள குடியேற்றக்காரர்கள் வருகை மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு சில நாட்களில் மட்டுமே, இத்தாலியை வந்தடைய முயன்ற குடியேற்றக்காரர்கள் சுமார் 550 பேர் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
No comments
Post a Comment