Latest News

July 26, 2013

பௌத்த பிக்குகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியது யார்? அனுரகுமார கேள்வி!
by admin - 0

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை என ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளர். 

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. குமரன் பத்மநாதன் விடுதலை செய்யப்பட்டார். எனினும் கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. 

வடக்கில் பாரியளவில் காணிப்பிரச்சினை காணப்படுகின்றது. போர் ஏற்படுவதற்கும் இது ஓர் முக்கிய காரணியாகும். வடக்கு காணிகளை அரசியல்வாதிகளின் அடியாட்களுக்கு வழங்காது. பிணக்குகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். 

பௌத்த பிக்குகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கியது யார்? இனவாதத்தை தூண்டி குழப்ப நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டை பற்றி கவலைப்படுவதில்லை மாறாக அதிகாரம் பற்றியே கவலைப்படுகின்றனர். மாகாணசபை முறைமையை ரத்து செய்து, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments