Latest News

July 27, 2013

பண்டாரவன்னியனின் நினைவிடத்தில் முஸ்லிம் மக்களைக் குடியேற்றத் திட்டம்
by admin - 0

வன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடமாக ஒதுக்கப்பட்டிருந்த, முல்லைத்தீவு கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த சில நாள்களாகக் குறித்த பகுதியில் “பைக்கோ” இயந்திரங்களைக் கொண்டு பெரும் மரங்கள் வேரோடு சரிக்கப்பட்டுத் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குமுழமுனை – தண்ணீரூற்று வீதியில் 4 ஆம் கட்டைப் பகுதியில் கற்பூரப் புல்வெளி என்ற இடத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டார வன்னியன், வெள்ளையர்களுடன் போரிட்டு வெற்றி கொண்ட இடமாகக் கற்பூரப் புல்வெளி பிரதேசம் காணப்படுகின்றனது.
இந்த 10 ஏக்கர் காணி யாருக்கும் வழங்கப்படாமல் அரசுடைமையாக இருந்தது.
இந்தக் காணிக்குப் பின்னால், தமிழ் மக்களுக்கு 1973 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “பெமிற்’ காணிகளையும் முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்காக அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது.
தற்போது வீதியின் அருகிலுள்ள 10 ஏக்கர் காணியையும் கைப்பற்றி அங்கு முஸ்லிம் மக்களை குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காகக் குறித்த காணியிலுள்ள பயன்தரு மரங்கள் அனைத்தும் “பைக்கோ’ இயந்திரத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments