பிரிவின் ஆலோசனையும்,
இரா. சம்பந்தனின் அரசியல்
தந்திரமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண
சபையின் முதலமைச்சர் வேட்பாளராக
நிறுத்தியுள்ளது என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேசம் அங்கீகரிக்கப்படக்கூடிய
விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம்
கூட்டமைப்பு தனது விடுதலைப்
புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க
முயற்சித்துள்ளது. மாவை சேனாதிராஜா முழுக்க முழுக்க
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்.
முக்கியமாக இந்தியாவும்
இதனை நன்கு அறிந்துள்ளது.
எனவே மாவை சேனாதிராஜாவை வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக
நிறுத்துவதை இந்தியா விரும்பாது. அதேவேளை இலங்கையில் தனித் தமிழீழம்
உருவாவதை இந்தியா ஒருபோதும்
விரும்பாது. இதனிடையே முன்னாள்
நீதியரசரின் விக்னேஸ்வரனின்
இரண்டு புதல்வர்களும் சிங்களப்
பெண்களையே மணந்துள்ளனர். இது மட்டுமல்லாது அவர் உயர் பதவி வகித்த
படித்தவர், இதனை கூட்டமைப்பினர்
சர்வதேசத்திடம் எடுத்துரைப்பர்.
விக்னேஸ்வரனால், தேசிய
நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும்
படித்த புத்திஜீவி சர்வதேசத்துடன் ஒத்துப்போகக் கூடியவர் என்பதையும்
கூட்டமைப்பு எடுத்துக் கூறும். எவ்வாறாயினும் இந்திய உளவுப் பிரிவின்
ஆலோசனை, சம்பந்தனின் அரசியல் வியூகம் என்பன காரணமாக விக்னேஸ்வரன் முதலமைச்சர்
வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது,
பயங்கரமானதும் நாட்டுக்கு ஆரோக்கியமற்ற
சூழ்நிலைமையுமாகும். எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த
அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள
வேண்டும். விக்னேஸ்வரனுக்கு அமைச்சர்
பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர்
பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றார்.
No comments
Post a Comment