எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதவான் விக்னேஸ்வரன் போட்டியிட உள்ளார். இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் இரா.சம்பந்தன் உறுதி செய்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதில்
கூட்டமைப்பு கட்சிகளுக்கு இடையில்
இழுபறி நிலைமை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர்
வேட்பாளராக நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. எனினும், தற்போது ஓய்வு பெற்ற நீதவான் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தேர்தல் வியூகம் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர்
தெரிவு குறித்து ஊடகங்களுக்கு அறிவித்த போது சம்பந்தன்
இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment